தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார்.
தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் ஜூலை 21 ஆம் தேதி ‘அநீதி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது.
அதற்காக வேண்டி ‘ஸ்ரீ சோட்டணிக்கரா பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனது மகளுடன் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார் வனிதா. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய, இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம வனிதாவின் மகளா இது?’ என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படம்…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற…
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதுவிதமான மோசடி ஒன்று…
தமிழக சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்த இரு கட்சிகளும்…
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு…
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…