மக்களே உஷார்… ஒரே ஒரு கிளிக் தான், உங்க whatsapp மொத்தமா காலி… அரங்கேறும் புதிய வகை மோசடி…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதுவிதமான மோசடி ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்திய கணினி அவசரக் கால பதிலளிப்பு குழு, Ghostpairing எனப்படும் ஒரு புதிய வகை மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிக்கு தொழில்நுட்ப ரீதியான பெரிய ஹேங்கிங் அறிவு தேவையில்லை. மாறாக சமூக பொறியியல் எனப்படும் மனித தவறுகளை பயன்படுத்தும் தந்திரத்தையே மோசடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ் அப்பில் உள்ள Link a Device அம்சத்தை தவறாக பயன்படுத்தி பயனர் அறியாமலேயே அவருடைய கணக்கை மற்றொரு கணினியில் அல்லது மொபைலில் மோசடிக்காரர்கள் இணைத்துக் கொள்கின்றனர். முதலில் whatsapp இல் ஒரு மெசேஜ் வரும். அது நமக்கு தெரிந்த நபரிடமிருந்து வந்தது போலவே இருக்கும். அதில் வணக்கம் இந்த புகைப்படத்தை பாருங்கள் என்ற வாசகத்துடன் ஒரு புகைப்படத்தின் பிரிவியூ இருக்கும். அந்தப் புகைப்படத்தை பார்க்க ஆர்வத்துடன் பயனர். அந்த இணைப்பை கிளிக் செய்யும் போது அவர் ஒரு போல் இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அந்த இணையதளத்தில் புகைப்படத்தை பார்க்க உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும் என்ற செய்தி வரும். பயனர் அதை சரி பார்க்கும் அதே வேளையில் பின்னணியில் whatsapp Device Linking செயல்முறை தொடங்கும். பையனார் அந்த இணையதளத்தில் கொடுக்கும் அனுமதி ஆனது உண்மையில் மோசடியாளரின் Browser பயனரின் whatsapp கணக்குடன் இணைக்க வழிவகுகின்றது. இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர் எதையும் உணர்வதற்கு முன்பே அவருடைய கணக்கு மோசடியாளரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்.

அதன் பிறகு மோசடியாளர் உங்கள் செய்தியை படிக்கவும் தனிப்பட்ட புகைப்படங்களை பார்வையிட முடியும். உங்கள் பெயரில் உங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்கலாம் அல்லது தவறான தகவல்களை பரப்பலாம். எந்தவித வைரஸ் மென்பொருளும் இல்லாமல் பயனரின் ஒரு சிறிய கவனக்குறைவு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே உங்களுக்கு வரும் செய்தியில் உள்ள இணைப்புகள் நம்பகமானதா என்று தெரியாமல் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?”…. மௌனம் கலைத்த அமைச்சர் நிர்மல் குமார்… பட்ஜெட்டுக்கு பின் காத்திருக்கும் ட்விஸ்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…

16 minutes ago

“1993 நரசிம்ம ராவ்… 2026 விஜய்?”… தமிழக அரசியலில் அடுத்த ‘சிபிஐ’ அணுகுண்டு… இன்பதுரை போட்ட அந்த ஒரு ட்வீட்….!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…

22 minutes ago

அதிமுகவிலிருந்து ‘அவுட்’… தவெக-வில் ‘இன்’… கோட்டையை ஆளப்போகும் அந்த 7 விக்கெட்டுகள் யார்?… ராஜ்பவனுக்கு போகும் அந்த ‘லிஸ்ட்’…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…

26 minutes ago

BREAKING: “தமிழக அமைச்சரவையில் விஜய் செய்யும் மாஸ் சம்பவம்”… 1967-க்கு பிறகு நடக்கப்போகும் அந்த வரலாற்றுச் சம்பவம்…!

தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…

31 minutes ago

இனி ஒரு கீறல் கூட விழாது… CM விஜய் பார்த்து பார்த்து வாங்கிய 5050 கார்…. வாயடைக்க வைக்கும் மிரட்டலான தொழில்நுட்பம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…

36 minutes ago

“அதிமுகவில் அடுத்த பிளவு?”…. சி.வி.சண்முகத்தின் டெல்லி ரகசிய பயணம்.. இபிஎஸ்-க்கு காத்திருக்கும் செக்… உடைத்த பகீர் உண்மை….!

தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…

42 minutes ago