பிரபல நடிகையான வாணி போஜன் ஒரு விமான சேவையில் ஏர் ஹோஸ்டர்ஸ்சாக வேலை பார்த்தார். அப்போதுதான் அவருக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் வாணி போஜன் ஹீரோயினாக நடித்தார்.

இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது. அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். ஆரம்பத்தில் வாணி போஜன் நடித்த படங்கள் மக்களிடைய அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

பின்னர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே அவருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. இதனையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீஷியா, ராமர் ஆண்டாளும் ராவண ஆண்டாளும், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் நடித்தார். ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாணி போஜன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அழகான புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் வினைகள் ஆகட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும், அன்புடனும் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். வாணி போஜன் பகிர்ந்த போட்டோசை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram
