ஸ்ரீ லக்ஷ்மி இண்டஸ்ட்ரீஸ் டெல்டிங் மற்றும் டேபிள் டாப் கமர்ஷியல் உள்ளிட்ட ஏராளமான வெட் கிரைண்டர்களின் முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் தரத்தில் நம்பர் ஒன்னாக இன்றளவும் இருந்து வருகிறது. கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இந்த லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் இன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
பவானிசாகரில் பிறந்தவர் தான் பிபி கிருஷ்ணமூர்த்தி. பவானிசாகர் அணை கட்டப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவரது குடும்பம் கோவை நகருக்கு இடம்பெயர்ந்தது. படிப்பை முடித்த கிருஷ்ணமூர்த்தி வணிகவரி அலுவலகத்தில் மூன்று மாதங்கள் வேலை செய்தார். அந்த நேரத்தில் தான் வணிக உலகில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு ஏற்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் முதலில் ஒரு விநியோகக்கடையை அமைத்தார் கிருஷ்ணமூர்த்தி.
அடுத்த கட்டமாக பொறியியல் படித்த கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஏதாவது புதுமையாக பொருளை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அப்போது அவரது நண்பர் அவர்களின் மனைவி கடுமையான முதுகு வலி காரணமாக மாவு அரைக்க முடியாமல் சிரமப்படுகிறார் என்று பேசிக் கொண்டிருக்கையில் அப்போது நாம் ஏன் வெட் கிரைண்டர் தயாரிக்க கூடாது என கிருஷ்ணமூர்த்திக்கு சிந்தனை ஏற்பட்டது. அப்படி உருவானது தான் ஸ்ரீ லட்சுமி கிரைண்டர். இது 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முதலாக கிருஷ்ணமூர்த்தி தான் வடிவமைத்த வெட் கிரைண்டரை ரூபாய் 650க்கு விற்றார் அதில் ரூபாய் 120 ரூபாய் லாபம் அவருக்கு கிடைத்தது. முதல் கிரைண்டரை விற்ற பின்னர் அதற்கு அந்த உபயோகப்படுத்த பெண்ணின் கருத்தை அறிய மிகவும் ஆவலோடு காத்திருந்த கிருஷ்ணமூர்த்திக்கு பச்சைக்கொடி கிடைத்தது. அந்த கிரைண்டரை வாங்கிய பின் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது என கூறினார். ஆனால் மோட்டாரின் சத்தம் அவருக்கு மிகவும் கவலையை கொடுத்தது. அடுத்த கட்டமாக அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார் கிருஷ்ணமூர்த்தி.
பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் சிறந்த கிரைண்டரை உருவாக்கினார் கிருஷ்ணமூர்த்தி. ஸ்ரீ லட்சுமி வெட் கிரைண்டர்கள் ஆரம்பத்தில் பல ஹோட்டல்களில் ஆரம்பகால வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது. அது வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றது. பிரபல உணவகங்களில் பல VIP குடும்பங்களின் வாடிக்கையாளர்கள் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்தனர். ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல்கள் அனைத்திற்கும் கிருஷ்ணமூர்த்தி கிரைண்டர்களை செய்து வழங்கினார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஸ்ரீ லட்சுமி கிரைண்டர் சுகுணா மோட்டார்ஸ் இன் மோட்டார்களை பயன்படுத்தியது. கிருஷ்ணமூர்த்தி கொடிசியாவின் நிறுவனங்களில் ஒருவராக இருந்தார். அப்படி இவர்கள் கொடுத்த தரத்தினால் இவர்களது வெட் கிரைண்டர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது.
இன்றளவும் தரத்திற்கு ஸ்ரீ லட்சுமி கிரைண்டர் தான் என்று பெயரோடு மட்டுமல்லாமல் கோயம்புத்தூர் கிரைண்டர் சிட்டி என்று அழைப்பதற்கும் இவர் காரணமாக இருந்தார். சுமார் 60 ஆண்டுகளாக ஸ்ரீ லட்சுமி கிரைண்டர்ஸ் இன் வணிகம் சிறந்ததாக கருதப்பட்டு வெறும் ரூபாய் 650 இல் ஆரம்பித்து இன்று கோடி கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறது. தற்போது கோயம்புத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது.