Categories: சினிமா

பாலோயர்ஸ் இருக்குன்னு அவங்கள நடிக்க வைக்குறாங்க.. ஆனா டயலாக் கொடுத்தா சொதப்புறாங்க- வடிவுக்கரசி வேதனை!

Spread the love

தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதேபோல வில்லி கதாபாத்திரத்தில் மட்டும்தான் அவர் சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்றில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்குவார். ஒரு கட்டத்தில் சினிமாவில் அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு கொடூர வில்லி கதாபாத்திரமேக் கொடுக்கப்பட்டது. சினிமாவில் தூள் கிளப்பியவர் சீரியலை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சீரியல் மற்றும் படங்களில் அதிகளவில் சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் இன்ப்ளூயன்சர்களை நடிக்கவைப்பது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அதில் “ரீல்ஸ் போடுபவர்களுக்கு அதிகளவில் பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என அவர்களை நடிக்க வைக்கிறார்கள், இயக்குனர்கள். ஆனால் வசனம் கொடுத்தால் பேச முடியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களால் நேரம்தான் வீணாகிறது. இது இயக்குனர்களுக்குப் புரிவதில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

4 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

8 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

9 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

22 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

24 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

25 minutes ago