இப்படியான நிலையில் வடிவுக்கரசி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்தையும் விஜய் சேதுபதியையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். அதில், எனக்கு ஏதாவது நடந்தது என்று கேள்விப்பட்டால் அங்கு முதல் ஆளாக நீங்கதான் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கிட்ட நான் சொன்னேன். அதை கேட்டதும் அவரே ஏன் இப்படி சொல்றீங்க என்று கேட்டார். என்னோட அடி மனசுல இந்த எண்ணம் தான் இருக்கு, எனக்கு ஏதாவது ஒன்னு நடந்து விட்டால் அவர்தான் அங்கு வந்து நின்னு எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு அந்த அளவுக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும். ஏனென்றால் விஜயகாந்தின் ஆவி தான் விஜய் சேதுபதி குள்ள இருக்கு என்று நான் உணர்கின்றேன்.
எல்லா குணத்தையும் அவர் மாதிரி தான் விஜய் சேதுபதி. எனக்கு விஜயகாந்தை எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு விஜய் சேதுபதியையும் பிடிக்கும். இப்போ பண்ணி முடிச்சுட்டு கூட மொத்தம் யூனிட்டுக்கும் விஜய் சேதுபதி சாப்பாடு போட்டு இருக்காரு. ஈவிபி கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சுமார் 2000 பேருக்கு சாப்பாடு போட்டு இருக்காரு. அங்க வந்த எல்லாருக்கும் கிஃப்ட் கொடுத்து இருக்காரு. இதெல்லாம் பண்ணனும்னு அவசியம் அவருக்கு இல்ல இருந்தாலும் தன்னோட மன நிறைவுக்காக இதெல்லாம் பண்ணி இருக்காரு. கமல் சார் ஒரு பெரிய ஸ்டேஜை உருவாக்கிக் கொடுத்திருக்காரு அதை நம்ப நல்லா பண்ணிக் கொடுக்கணும் என்ற உணர்வோடு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் எடுத்து பண்ணிருக்காரு என்று விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசி உள்ளார்.