தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வி ஆர் திலகம். இவர் அந்த காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியவர். இவர் அவளுக்கு நிகர் அவளே, சர்வர் சுந்தரம், சூதாட்டம், பிராயசித்தம், தசாவதாரம், குமரிக்கோட்டம், வா ராஜா வா, வந்தாலே மகராசி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, மாணிக்கத் தொட்டில், காரைக்கால் அம்மையார், நீ ஒரு மகராணி, புதிய வாழ்க்கை என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை வி ஆர் திலகம் அவர்கள் நடிகர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் அந்த காலகட்ட தமிழ் படங்களில் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் .தற்பொழுது இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வி ஆர் திலகம் அவர்கள் தனது கணவருடன் இணைந்து கொடுத்த பேட்டியானது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘தான் முதன் முதலில்’ உனக்கும் எனக்கும்’ என்ற திரைப்படத்தில் நடித்ததாகவும், அதில் எம் ஆர் ராதா வாசு, ஜோ இருவருக்கும் அம்மாவாக நடித்ததாகவும், இந்த திரைப்படத்தின் ஹீரோ ஜெய்சங்கர் என்றும் குறிப்பிட்டார். தன்னை விட வயதில் மூத்த நடிகர்களுக்கு அம்மாவாக 21 வயசிலேயே நடிக்க காரணம் , என்னுடைய குடும்ப கஷ்டம் தான். நான் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை’ என்று மனம் திறந்து பேசி உள்ளார். இதோ இந்த பேட்டி….