தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா. விஜய் திரிஷா ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர். அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். கடைசியாக திரிஷா GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்து மட்ட பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டிருப்பார்.
அகில் பால், அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படமான ‘ஐடன்டிடி’ படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி மலையாளம், தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்ற பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அஜித்துடன் திரிஷா நடித்த விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேசமயம் அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் திரிஷா ஜோடியாக நடித்துள்ள நிலையில் அந்த திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. மறுபக்கம் கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படத்திலும் இவர் நடித்து முடித்துள்ள நிலையில் சூர்யாவின் 45 வது திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இதனால் திரிஷா பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவர் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளதால் அவருடைய ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை திரிஷா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அடிக்கடி x மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்து வருவார். இப்படியான நிலையில் திடீரென்று நடிகை திரிஷாவின் x சமூக வலைதள பக்கம் திடீரென்று முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை திரிஷா உறுதி செய்துள்ள நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவையும் பகிர்ந்து உள்ளார். அதில், எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது, அது சரி செய்யப்படும் வரை அதில் பதிவிடப்படும் பதிவுகள் என் பதிவுகள் கிடையாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.