தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 42 வயதிலும் அதே இளமையோடு தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றார். பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரன் தோழியாக தலைகாட்டியவர் தான் திரிஷா. தொடர்ந்து மௌனம் பேசியதே, லேசா லேசா ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய், அஜித் மற்றும் தனுஷ் சொல்லிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. தற்போது இதற்கு கிட்டத்தட்ட பதில் கிடைத்துவிட்டது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷா விரைவில் கரம் பிடிக்க உள்ளதாகவும், இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரவில்லை என்றாலும், ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
