
CINEMA
“அவர் ஒரு ஜென்டில்மேன்.. அந்த நடிகரை போல தான் கணவர் வேண்டும்”… மனம்திறந்த நடிகை திரிஷா…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இடையில் இவரது கேரியர் கொஞ்சம் டல் ஆனது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது.
தற்பொழுது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்று கூறலாம். இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக கமலுடன் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். பல்வேறு இப்படி பிசியாக பல படங்களில் நடித்து வரும் திரிஷா 40 வயதை எட்டியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில், தனது திருமணம் குறித்து நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல கணவராகவும், அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள்’ என நடிகை திரிஷா கூறியுள்ளார். இது பழைய பேட்டி என்பதும் குறிப்பித்தக்கது.