தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் ‘பலே வெள்ளைய தேவா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

#image_title
#image_title#image_title#image_title#image_title
அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் 5 வருடங்களாக தமிழ் சினிமாவில் விலகி இருந்த இவர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இளம் நடிகையான தன்யா ரவிச்சந்திரன் ஆறு வருடங்களில் நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர் அதர்வா நடிப்பில் வெளியான’ ட்ரிக்கர்’ திரைப்படத்திலும், நடிகர் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.