முகப்பருவிற்கு நடிகை தமன்னா சொன்ன ஈஸி டிப்ஸ்… “ஆனால் வேண்டாம் ஆபத்து” என எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் அதிக அளவில் நடித்து முன்னை நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி அளித்த அவர், என்னுடைய முகத்தில் முகப்பருவிற்கு நான் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தவில்லை. எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக என்னுடைய உமிழ் நீரை தான் பயன்படுத்துகிறேன். பொதுவாக நம்முடைய வாயில் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு கூறுகளை உருவாக்கி உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தோல் மருத்துவர்கள் முகப்பருவின் மீது உமிழ்நீரை தடவுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்கள். உமிழ் நீரை முகப்பருவின் மீது தடவுவது பயனளிக்கும் என்று எந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சிகளும் இல்லை. பிரபலங்கள் சொல்கிறார்கள் என்பதால் அதை பின்பற்ற வேண்டாம். அது கிருமியற்றது என்று எண்ணம் தவறானது. சருமத்தில் வெடிப்பு இருக்கும்போது மேல் தோல் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும். நோய் கிருமிகளை சருமத்தின் உட்புற அடுக்குகளுக்கு செலுத்தி தொற்றுநோயை ஏற்படுத்தும். உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் தன்மை கொண்ட PH தோலில் எரிச்சல் அல்லது வறட்சியை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.