படுக்கைக்கு அழைப்பவர்கள் மட்டுமல்ல.. அதற்கு சம்மதிப்பவர்களும் தப்புதான்… நடிகை எஸ்தர் நோரானா ஓபன் டாக்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து ‘கேம் ஆப் லோன்ஸ்’ பட நடிகை எஸ்தர் நோரானா தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களால் ஒட்டுமொத்த சினிமாவின் தரம் கெடுவதாக அவர் சாடியுள்ளார். தற்போதைய தலைமுறையினர் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பு வழங்குவது ஆறுதல் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய காலங்களில் நிலைமை மோசமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைப்பவர்கள் எந்தளவுக்குத் தவறானவர்களோ, அதே அளவிற்குத் தங்களின் முன்னேற்றத்திற்காக அந்தச் செயலுக்கு உடன்படுபவர்களும் தவறானவர்களே என்று எஸ்தர் தடாலடியாகக் கூறியுள்ளார். சினிமாவை ஒரு தொழிலாக நேசிப்பவர்கள் இத்தகைய செயல்களை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது என்பதே அவரது கருத்தாக உள்ளது.