பிரபல பாலிவுட் நடிகையான தபு ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகை தபு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே டேவிட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து நடிகை தபு பெரிதாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பாலிவுட் நடிகையான இவர் 1982ல் வெளியான ‘பஜார்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார் இத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார். ‘விஜய்பாத்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தபுவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. நடிகை தபுவின் நடிப்பில் தற்பொழுது ஹிந்தியில் KUTTEY திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
ஹிந்தியில் பயங்கர பிசியாக நடித்துக் கொண்டுவரும் நடிகை தபு தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தபு. இவர் தற்பொழுது netflix நிறுவனத்திற்கு மாடலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,…
மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…