Connect with us

CINEMA

51 வயதிலும் குறையாத அதே அழகு…! ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட நடிகை தபு இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…?

பிரபல பாலிவுட் நடிகையான தபு ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகை தபு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே டேவிட் போன்ற பல  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

   

இதைத்தொடர்ந்து நடிகை தபு பெரிதாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை.  பாலிவுட் நடிகையான இவர் 1982ல் வெளியான ‘பஜார்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார் இத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார். ‘விஜய்பாத்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தபுவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. நடிகை தபுவின் நடிப்பில் தற்பொழுது ஹிந்தியில் KUTTEY திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

ஹிந்தியில் பயங்கர பிசியாக நடித்துக் கொண்டுவரும் நடிகை தபு தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தபு. இவர் தற்பொழுது netflix நிறுவனத்திற்கு மாடலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top