இந்த புகைப்படத்தில் இருக்கும் தனுஷ் பட நடிகை யாருன்னு தெரியுமா..? இப்போ பான் இந்தியா ஸ்டார் ஆகிட்டாங்க..!!

By admin on ஆடி 29, 2024

Spread the love

தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதன்முதலாக கடந்த 2010-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சிம்மாண்டி நாதம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

கடந்த 2011-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படம் நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார் டாப்ஸி பன்னு. அதே 2011-ஆம் ஆண்டு வந்தான் வென்றான் திரைப்படத்திலும் டாப்ஸி ஹீரோயினாக நடித்தார்.

   

 

இதனைத் தொடர்ந்து வலை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் சிறிய தோற்றத்தில் நடித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன காஞ்சனா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்தார். படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் மற்றும் விளம்பரங்களிலும் டாப்ஸி பிஸியாக நடித்த வருகிறார்.

டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிட்டன் வீரரை டாப்ஸி பன்னு நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். பொதுவாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் நடிகை டாப்ஸியின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சிறுவயதிலும் டாப்ஸி இவ்வளவு அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.