கவர்ச்சியில் தாராளம் காட்டும் ஆடுகளம் பட நடிகை.. லேட்டஸ்ட் ஸ்டில்கள் பார்த்து ஸ்தம்பித்து போன சோஷியல் மீடியா..!

By Nanthini on ஆவணி 17, 2024

Spread the love

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் நாயகியாக நடித்த தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகை டாப்ஸி. தனது முதல் திரைப்படத்திலேயே சினிமா ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

   

இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாவதற்கு முன்பு தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் திரைப்படங்களை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

 

இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகின்றார். தெலுங்கு சினிமாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் டாப்ஸி தமிழில் அடிக்கடி வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 மற்றும் கேம் ஓவர் போன்ற சொற்பமான திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தமிழில் இவர் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிற்கும் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தெலுங்கு நடிகையாக இருந்து டாப்சி தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வரும் டாப்ஸி இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் டாப்ஸி தற்போது ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.