“எனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும்”.. காரணத்தை வெளிப்படையாக கூறி பரபரப்பை கிளப்பிய சங்கீதா..!!

By Nanthini on ஆவணி 17, 2024

Spread the love

தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. 1997 ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வெளியான காதலே நிம்மதி படம் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வந்தார். குறிப்பாக உயிர், தனம் மற்றும் நேபாளி என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

   

நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் தான் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சங்கீதா சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வந்தார். அது மட்டுமல்லாமல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் சங்கீதா அளித்த பேட்டியில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என எந்த மொழியில் பட வாய்ப்பு வந்தால் நடிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சங்கீதா, தனக்கு தமிழ் பிடிக்காது என்றும் தான் தெலுங்கு மொழியை தான் தேர்வு செய்வேன் என்றும் கூறினார். காரணம் தமிழில் respect கிடைக்கவில்லை என்றும் தெலுங்கு சினிமாவில் அது கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் அந்த மனப்பான்மை யாருக்கும் வருவதில்லை என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.