விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘தமிழும் சரஸ்வதியும்’ இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது ‘தமிழ் திருமணம் ஆகாதவர் என்று நமச்சி சொன்ன பொய்யை நம்பி மேக்னா தமிழை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.

தமிழுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கிறார். தமிழ் தங்கச்சி கணவரான அர்ஜுன் உண்மையை பலமுறை மேக்னாவிடம் கூற முயற்சி செய்தும் கூற முடியவில்லை. தமிழின் பொருள்களை திருடியதற்காக மேக்னா போலீசில் அர்ஜுனை போலீசில் கையும் களவுமாக பிடித்துக் கொடுத்துள்ளார்.

இப்படி கதை தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீரியலில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திற்கு அக்காவாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்வாதிகா செந்தில்குமார். பெரும்பாலும் வில்லி கதாபத்திரத்தில் நடிப்பவர்களுக்கு தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களே அமையும்.

ஆனால் தற்பொழுது வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது பொதிகை சேனலில் ‘சக்தி ஐபிஎஸ்’ என்ற புது சீரியலில் ஹீரோயினாக இவர் நடித்து வருகிறாராம். ஒரு சின்ன கிராமத்து பொண்ணு ஐபிஎஸ் அதிகாரி ஆகும் விஷயங்கள் தான் இந்த சீரியலின் கதை என்றும் கூறப்படுகிறது.
View this post on Instagram
