‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. 2008ல் நகுல் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தெலுங்கு, கன்னட படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இதை தொடர்ந்து அவர் நீர் பறவை, மாசிலாமணி, வம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சில்லு கருப்பட்டி மற்றும் ட்ரிப் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘ரெஜினா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சுனேனா.

தற்போது இவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூக்கிலும், கையிலும் ட்யூப் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். மேலும் அவர், ‘விரைவில் குணமாகி விடுவேன். எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்’ என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை பற்றி அவர் தெரிவிக்கவில்லை. இதோ அந்த புகைப்படம்…

