இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் சென்னையில் பல மேடைகளில் பரங்கநாட்டிய அரங்கேற்றம் செய்திருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த நடிகை சுகன்யா, ஒரே ஆண்டில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு சில படங்களில் சுகன்யா நடித்து வந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுகன்யா கூறியதாவது, மகாநதி படத்திற்கு முன் சினிமா துறையில் இருந்து ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நான் சிங்கப்பூருக்கு கமலுடன் போயிருக்க வேண்டியது. ஆனால் அந்த புரோகிராம் என்னால் செய்ய முடியவில்லை. மூன்று ரிகர்சல்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் பொள்ளாச்சி கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் நான் பிஸியாக இருந்ததால் ஒத்திகைக்கு செல்ல முடியவில்லை. அதனால் கமலுடன் இனி வேலையே செய்ய முடியாது என்று நினைத்தேன். ஆனால் மகாநதி இந்தியன் என்ற இரண்டு படங்கள் அவருடன் சேர்ந்து நடித்தேன் என்று நடிகை சுகன்யா அந்த நேர்காணலில் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
