Categories: சினிமா

ஹீரோயின் அறையை பார்த்ததும் ஷாக்காகி கத்திய தயாரிப்பாளர்.. அந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா..!!

Spread the love

1970 மற்றும் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுஜாதா. இவர்தான் அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுஜாதா நடித்துள்ளார். இவருக்கு பூர்வீகம் கேரளா. முதன்முதலாக போலீஸ் ஸ்டேஷன் என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் கடந்த 1972-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடித்தார்.

முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சுஜாதா 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சித்ரா லட்சுமணன் சுஜாதா பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார். அந்தமான் காதலி படத்தின் ஷூட்டிங்கிற்காக சிவாஜி சுஜாதா ஆகியோர் அந்தமானுக்கு சென்றுள்ளனர். அந்த காலகட்டத்தில் பெரிய ஹோட்டல்கள் கிடையாது.

இதனால் இருப்பதிலேயே சுமாரான ஒரு நான்கு அறைகளை தயாரிப்பாளர் புக் செய்து கொடுத்துள்ளார். அதில் ஒரு அறை சிவாஜிக்கு, இன்னொரு அறை சுஜாதாவுக்கு என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சுஜாதா சென்றுள்ளார். ஆனால் அங்கு வேறு யாரோ இருந்ததால் மற்றொரு அறையில் தங்கினார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ராமசாமி வந்து பார்த்தபோது ஷாக் ஆகிவிட்டாராம்.

மேலும் அவர் கோபத்தில் ஹோட்டல் உரிமையாளரை சத்தம் போட்டு உள்ளார். ஏனென்றால் அந்த அறையில் ஒரு பாத்ரூம் கூட கிடையாதாம். பாத்ரூம் போக வேண்டும் என்றால் வெளியே தான் வர வேண்டுமாம். இதனால் தயாரிப்பாளர் கோபப்பட்டு சத்தம் போட்டு உள்ளார். உடனே சுஜாதா நாம் இருக்கப் போறதே ஒரு பத்து நாட்கள் தான். நான் சமாளித்துக் கொள்கிறேன். சத்தம் போட வேண்டாம் என கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் குளிப்பதற்கு கூட மினரல் வாட்டர் வேண்டும் என நடிகைகள் கேட்கின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நடிகையா என பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago