பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான சுதா சந்திரன், 2026 ஜனவரி 4 அன்று நடைபெற்ற ‘மாதா கி சௌகி’ (Mata Ki Chowki) பக்திப் பாடல்கள் நிகழ்வின் போது, ஆன்மீகப் பரவசத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காளி மாதா பஜனை பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, சுதா சந்திரன் ஆழ்ந்த ஆன்மீக நிலைக்கு (spiritual trance) சென்று, உடல் சிலிர்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
Sudha Chandran unable to control her emotions during Mata Ki Chowki.pic.twitter.com/b1kLthGTOP
— News Algebra (@NewsAlgebraIND) January 5, 2026
அவர் அழுதுகொண்டே சாமியாடுவது போன்ற காட்சிகளைக் கண்ட அங்கிருந்தவர்கள், அவருக்குத் தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்த முயன்றனர். சமூக வலைதளங்களில் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலர், அவரது ஆழ்ந்த பக்தியைப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், அவரது இந்த நிலை குறித்து சிலர் கவலையையும் தெரிவித்துள்ளனர்.
