நடிகை ஸ்ருஸ்டி டாங்கேவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை உருகி உருகி வர்ணித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஸ்ருஸ்டி டாங்கே. 2010 ஆம் ஆண்டு வெளியான யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் பின்னர் புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளிவந்த தர்மதுரை என்ற திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ருஸ்டி டாங்கேவுக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

கடைசியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நான்கு நடிகைகளில் ஒருவராக நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து வந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் மிக கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

