பிரபல இயக்குனரான ஸ்ரீதர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார் .முதன் முதலாக ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1959 ஆம் ஆண்டு கல்யாண பரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை ஸ்ரீதர் இயக்கியனார். கடந்த 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தில் முத்துராமன், கல்யாண் குமார், தேவிகா, வி எஸ் ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நகைச்சுவை நடிகர் நாகேஷ், மனோரமா, வி.எஸ் ராகவன் குட்டி பத்மினி உள்ளிட்டோர் துணைக்காக பாத்திரத்தில் நடித்தனர். மற்ற இயக்குனர்களின் படங்களை காட்டிலும் ஸ்ரீதர் இயக்கும் படங்கள் தனித்துவமாக இருக்கும். இயக்குனர் ஸ்ரீதர் புதுமை விரும்பி ஆவார்.
படம் எடுப்பது மட்டுமில்லாமல் படத்தை விளம்பரப்படுத்துவதிலும் புதுமையை கொண்டு வந்தவர் ஸ்ரீதர். இந்நிலையில் நெஞ்சில் ஒரு ஆலயம் சூப்பர் ஹிட் ஆனதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்ரீதர் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார். அந்த விளம்பரத்தில் படம் சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அந்த விளம்பரத்தின் சிறப்பு அம்சமே அதுதான்.
விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த வாசகங்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அது என்னவென்றால் நன்றி..! தமிழ் பட ரசிகர்களுக்கு… எங்களின் புதிய படைப்பான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை விரும்பி வரவேற்ற மனப்பூர்வமாக பாராட்டி அதை ஒரு வெற்றி படமாக ஆக்கிய பெருமை உயர்ந்த கலையை சிறந்த முறையில் ரசிக்கும் தமிழ் மக்களே சேரும் என்று பணிவோடு கூறிக் கொள்கிறோம். மேலும் இத்துறையில் நாங்கள் செய்ய விரும்பும் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தந்து ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்கள் அன்புள்ள.. ஸ்ரீதர், கண்ணதாசன், வின்சென்ட், கங்கா, பி. மாதவன், பி.என் சுந்தரம், எம்.எஸ் விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி, என்.எம் சங்கர் என குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்களும் கையெழுத்துட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விளம்பரம் வேறு எந்த படத்திற்கும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.