தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகை என்று பெயர் எடுத்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். 70 மற்றும் 80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருடைய உண்மையான பெயர் அலமேலு. நடிகை ஸ்ரீபிரியாவின் குடும்பம் மிகப்பெரிய இசை குடும்பம் ஆகும். சித்தப்பா, பெரியப்பா மற்றும் மாமா என அனைவரும் பெரிய இசை வித்தர்களாக இருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பழமொழி திரைப்படங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீபிரியா அதில் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் தான் அதிகம் நடித்தார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மற்றும் 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் இவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. முதன்முதலாக மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தை தான் இயக்கியிருந்தார். மொத்தம் ஐந்து திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். சினிமா மட்டுமல்லாது சீரியல்களிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர் ஸ்ரீப்ரியா. அதில் அவர் இயக்கிய விடுதலை என்ற சீரியல் புகழ் பெற்றது. குறிப்பாக இவர் நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் சினிமாவில் அவர் ரசிக்காத ரசிகர்களை கூட சம்பாதித்துக் கொடுத்தது. எதையும் நேரடியாக முகத்துக்கு நேராக சொல்வது தான் இவருடைய ஸ்டைல். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை நிதானமாக கையாண்டால் ஒன்னும் இல்லாமல் செய்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக தான் ஸ்ரீபிரியா வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது பிரபல இயக்குனரான டிஎன் பாலு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீபிரியா ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் அவர் கொடுத்த தேதியில் ஸ்ரீபிரியாவால் சென்று நடிக்க முடியாமல் போனது. இதனால் கோபம் அடைந்த டிஎன் பாலு அவரிடம் நேரடியாக எதுவும் பேசாமல் வழக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இப்படியான நிலையில் டிஎன் பாலுவின் சட்டம் என் கையில் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. அந்த விழாவில் ஸ்ரீபிரியா கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏனென்றால் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் பத்திரிக்கையில் வந்திருந்த சமயத்தில் ஸ்ரீபிரியா அவருடைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நேராக டிஎன் பாலுவை சந்தித்து வாழ்த்திவிட்டு முதல் வரிசையில் ஸ்ரீபிரியா அமர்ந்து விட்டார். அவர் அப்படி செய்தது டிஎன் பாலுவை கண்கலங்க செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு டிஎன் பாலு அந்த வழக்கை வாபஸ் பெற்றார். பின்னர் இவர்களுக்கு இடையேயான பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சமூகமாக அணுகினால் தீர்வு காண முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இதுதான்.
