என்னது GOAT படத்துல குத்து பாட்டா?.. தளபதியுடன் ஆட்டம் போடப்போவது இந்த நடிகையா?

By Mahalakshmi on சித்திரை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கின்றது.

   

அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் சினேகா,லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி,பார்வதி நாயர் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்றும் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய் இளமையாக காட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

   

 

இப்ப படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .இந்நிலையில் தற்போது புதிய ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது கோட் திரைப்படத்தில் ஐட்டம் சாங் ஒன்று இருப்பதாகவும்.அந்தப் பாடலுக்கு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தில் நடனமாடிய ஸ்ரீ லீலா நடனமாக இருப்பதாக கூறப்படுகின்றது.