திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?.. மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாங்களே..!!

By Nanthini on செப்டம்பர் 27, 2023

Spread the love

விஜேவாக இருந்து சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் முதன்முதலாக விக்ரம் நடித்த சாமுராய் என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் என்ட்ரி ஆனார்.

   

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் சாமுராய் திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

 

திமிரு படத்தில் இவரின் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரே படத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்.

தற்போது வரை டாப் 10 தமிழ் பட வில்லிகளின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரேயா ரெட்டி. இதுவரை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் மற்றும் காஞ்சிவரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்தார். பத்து வருடங்களுக்குப் பின்னர் சில சமயங்களில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர்தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini