தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஸ்ரீ லீலா. இவர் 2019 ஆம் ஆண்டு ‘கிஸ்’ என்ற கன்னட மொழி திரைப்படத்தின் கிஸ் தான் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் என இரண்டு மொழிகளிலும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார். இப்படி சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. தற்போது இவர் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோல் சமுத்திரகனியின் இயக்கத்தில் விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாடி உள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகர் பாலகிருஷ்ணாவின் 108 வது படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படம், வக்கந்தம் வம்சி இயக்கத்தில் நிதின் நடிக்கும் படம், நவீன் பொலிஷெட்டியின் அனகநக ஒக ராஜு படம், விஜய் தேவரகொண்டாவின் 12வது படம் என பல படங்களில் வரிசையாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இப்படி தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீலீலா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாடர்ன் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை திணற வைத்துள்ளார்.
