பழம்பெரும் மூத்த நடிகை செளகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்தியத் திரையுலகில் முத்திரை பதித்த இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி. ராமராவ், ரஜினிகாந்த், கமலஹாசன் எனப் பல தலைமுறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரைத் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து நலம் விசாரித்தனர்.
