நிச்சயத்திற்கு பிறகு நடிகை சோபிதாவின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்.. என்ன சொல்லிருக்காங்கன்னு பாருங்க..!!

By Priya Ram on ஆகஸ்ட் 12, 2024

Spread the love

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

   

விவாகரத்து ஆன பிறகு நடிகை சமந்தாவும் மையோசிட்டிஸ் சென்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து ஆன்மீகம், சினிமா என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக நாக சைத்தன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் ஒரே இடத்துக்கு சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

   

 

நடிகை சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஃபெமினா அழகு போட்டியில் சோபிதா துலிபாலா பங்கேற்றார் அந்த போட்டியில் வெற்றி பெற்றார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் ரிலீஸ் ஆன ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தின் மூலம் சோபிதா துலிபாலா ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சோபிதாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் நிச்சயம் நடைபெற்று அந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் வைரலாது. இந்த நிலையில் சோபிதா தனது நிச்சதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என பதிவிட்டுள்ளார்.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sobhita இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sobhitad)