Connect with us

CINEMA

90’ஸ் முன்னணி நடிகை சிவரஞ்சனியின் கணவரை பாத்துருக்கீங்களா?… அவர் இந்த விஜய் பட நடிகரா?… இதோ அழகிய குடும்ப புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் .  இவர் 1990 ஆம் ஆண்டு ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிவரஞ்சனி. இதைத்தொடர்ந்து சரத்குமாருக்கு ஜோடியாக இவர் நடித்த அரண்மனை காவலன் என்ற திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாக்கியது.

   

பொதுவாக சினிமா என்றாலே ஹீரோயின்களின் மவுசு அவர்களுக்கு வயசு இருக்கும்வரை மட்டும்தான். சற்று வயது அதிகமாகிவிட்டாலே பட வாய்ப்புகள் குறைய தொடங்குவதும், ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மா, அக்காவா நடிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.  அப்படி இவர் பல திரைப்படங்களில் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார்.

இவர், கடைசியாக 1998 ஆம் ஆண்டு துர்கை அம்மன் என்ற தமிழ் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.  இவர் ஸ்ரீகாந்த்தை  திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சிவரஞ்சனி. திருமணத்திற்கு பிறகு இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது.

நடிகை சிவரஞ்சனியின் கணவரான நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ரிலீசான தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சிவரஞ்சனியின் மகளுக்கு தற்பொழுது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடிகை சிவரஞ்சனி தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top