என்னாச்சு இந்த காதல் ஜோடிக்கு…? காதலனை பிரிந்தாரா ஸ்ருதிஹாசன்…? அவர் செய்த வேலையால் குழப்பத்தில் ரசிகர்கள்…

By Begam on சித்திரை 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.  இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

   

 

   

இவர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.ஆனால் சிறு வயதிலேயே  குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

 

இவர் நடிப்பில் இறுதியாக ”சிங்கம் 3” திரைப்படம் வெளியானது. ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் நடிகர் மைக்கேலை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் காதலை முறித்துக் கொண்டதாக அறிவித்தனர். காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன் மன அழுத்தத்தில் இருந்தார். இதைத்தொடர்ந்து அவர்  சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தற்பொழுது சுதந்திர காதல் பறவைகளாக சுற்றி வந்தனர்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சாந்தனுவை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலுக்கு ஏற்றாப்போல் இருவரும் சில மாதங்களாக ஒன்றாக காணப்படவில்லை. மேலும், ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளார். இதனால் இருவரும் பிரேக் கப் செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் பரவ துவங்கியுள்ளது. அதே போல் சந்தனுவை ஸ்ருதி ஹாசன் அன் ஃபாலோ செய்துள்ளார். இத்தகவல் உண்மையா..? என்பது குறித்து ஸ்ருதி ஹாசன் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம்.