விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டரின் மனைவியாக நடித்திருந்தார்.
அழகு மட்டும் இல்லை ஆக்டிங் அண்ட் டான்ஸ் ஆடும் திறமையும் இவருக்கு உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் தினம் தோறும் புது விதமான வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து வீட்டில் விசேஷம், டிஎஸ்பி மற்றும் நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினமும் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது குட்டையான உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.