#image_title
தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஷகிலா. மலையாளம், தெலுங்கு என பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்திய ஒரு நேர்காணலில் ஷகிலா கூறியதாவது, சென்னை, கோடம்பாக்கத்தில் எங்கள் வீடு இருந்தது. சென்னை தான் எனது சொந்த ஊர். நான் 10ம் வகுப்பு படித்த போது பெயிலாகி விட்டேன்.
என் தந்தை என்னை அடித்தார். அப்போது எங்கள் வீட்டுக்கு எதிரில் சினிமா கம்பெனி ஒன்று இருந்தது. அங்கிருந்த சிலர் வந்து என்னை அடித்துக்கொண்டு இருந்த அப்பாவை தடுத்தனர். அப்போது மேக்கப்மேன் உமாசங்கர் என்பவர், என்னை நடிக்கறியா எனக் கேட்க நான் சம்மதித்தேன்.
அடுத்தநாள் நானும், என் தங்கையும் அந்த டைரக்டரை பார்க்க சென்றோம். அவர் என்னை பார்த்தவுடனே எந்த மேக்கப் டெஸ்ட்டும் எடுக்காமல், போட்டோஸ் எடுக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டார். நான் லிப்ஸ்டிக்கும், கண் மை மட்டுமே போட்டிருந்தேன். இப்போது போல் அப்போதெல்லாம் மேக்கப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது செக்ஸ் எஜூகேசன் படம் என்று சொன்னார்கள். அது ஏ படம் என்ற புரிதல் மட்டுமே அப்போது எனக்கு இருந்தது. முதல் படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறோமே என்று தோன்றினாலும், சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சரி என்று இருந்துவிட்டேன்.
என் அப்பா தான் கதை கேட்பது, சம்பளம் பேசுவது என இருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில், சில காட்சிகளில் என்னை ஆபாசமாக நடிக்க வைத்தனர். வீட்டுக்குள் இருக்கும்போதே குளித்துவிட்டு டவலுடன் வரவே சங்கோஜப்படுவோம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் உடம்பின் முக்கிய பாகங்கள் தெரியும் விதமாக, அதாவது அரை நிர்வாணமாக நடிப்பது என்பது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதை ஏற்க முடியாமல் நான் பலமுறை அழுதேன். ஆனால் அதை அங்கிருந்த டைரக்டர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
உன் அப்பாவிடம் எல்லாம் பேசியாகி விட்டது. இதுதான் கதை என்று சொல்லிவிட்டோம். சம்பளமும் தந்துவிட்டோம். நாங்கள் சொல்கிறபடி நடிக்க வேண்டும் என்று மிரட்டியே என்னை அந்த காட்சிகளில் நடிக்க வைத்தனர். என் தங்கையும் நடிக்க ஒத்துக்கொண்டதால், அவளுக்கும் இதுபோன்ற காட்சிகளில் மிரட்டி நடிக்க வைத்தனர், என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…