#image_title
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த சீதா பாண்டியராஜன் இயக்கத்தில் ரிலீசான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோருடன் இணைந்து சீதா சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவி, சூர்யா டிவி, மெகா டிவி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார். சீதா நடிகர் பார்த்திபன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் நடிகை சீதா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் படம் நான் பாண்டியராஜன் சார் கூட பண்ணினேன். அதுக்கப்புறம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஒரு சில பிரச்சனை. ஒரு 4,5 வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் நடிக்க வந்தேன். எங்க டைரக்டர் மேல எனக்கு ரொம்ப மரியாதை வந்துச்சு. எனக்கு சினிமா ப்ரொபஷன் மட்டும்தான் தெரியும். என்ன காப்பாத்துனது, கை கொடுத்து தூக்கி விட்டது எல்லாமே சினிமா தான்.
இது நான் ரெண்டாவது நடிக்க வந்ததுக்கு அப்புறம் தான் நடந்துச்சு. இன்னைக்கு நான் நல்ல சாப்பிட்டு இருக்கேன் அப்படின்னா அதுக்கு காரணம் இயக்குனர் பாண்டிராஜ் தான். அவர்தான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தார். நான் பெருசா எதுவும் படிக்கல. பத்தாம் ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். என்னைக்குமே பாண்டியராஜன் சாருக்கும் அவரோட குடும்பத்திற்கும் கடமைப்பட்டிருக்கேன் என கூறியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…