தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.
குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இதனிடையே ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 11ம் தேதி ரிலீஸ் ஆகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் பிளாக். இந்த திரைப்படத்தை பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார்.
இப்படம் ஹோகரன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் படம் ஆகும். முதல் வாரத்திலேயே இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. இதனால் படக்குழு வெற்றி விழாவை சென்னையில் கொண்டாடினர். அப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவாவின் மனைவி கலந்து கொண்டார். ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ஜீவா மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…