சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் இனியா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்காததால் விரைவில் முடிக்க போகிறார்கள். சன் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்து வருகின்றார்.தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த ஆண்டு வரை டி ஆர்பியில் சக்கை போடு போட்டு வந்த இனியா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்காததால் அதனை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இனியா சீரியலுக்கு பதிலாக அன்பே வா மெகா தொடர் பிரபலம் பூமிகா நடிப்பில் ஆடுகளம் என்ற புதிய சீரியல் ஒன்று உருவாகி வரும் நிலையில் அது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அது இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் இனியா சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…