தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் கச்சிதமாக பொருந்தும் என்றால் அது ரகுவரனுக்கு தான். முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் பேசிய டயலாக் இல்லை என்றால் படமே இல்லை. இதனைப் போல மார்க் ஆண்டனி இல்லை என்றால் பாட்ஷா திரைப்படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரகுவரன் வில்லனாக நடித்ததால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற நடிப்பு சூறாவளி 90களில் உச்சம் தொட்ட போது அவருக்கு ஈடு கொடுத்து நடித்து தன்னுடைய நடிப்பால் ஆண்டனி கதாபாத்திரத்தையும் மக்கள் மத்தியில் நிறுத்தியவர் தான் ரகுவரன். கேமரா முன்பு வந்து விட்டாலே நடிப்பு ராட்சசன் ஆக மாறி விடுவார். திரை உலகமே கொண்டாடிய கலைஞர்கள் பட்டியலில் ரகுவரனுக்கு தனி ஒரு இடம் உண்டு. கேரளாவின் பாலக்காடு, தமிழ் சினிமாவுக்கு தந்த அற்புத கலைஞன் தான் ரகுவரன்.
இவர் முதலில் அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்புக்கான பட்டப் படிப்பை முடித்த பிறகு சில காலம் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. ஹீரோவாக அறிமுகமான அடுத்த ஆண்டு சில்க் சில்க் சில்க் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். பிறகு 1986 ஆம் ஆண்டு விசு உடன் அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சிவா, ஊர்க்காவலன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படி ரஜினியை வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வந்த ரகுவரன் கமல்ஹாசன் உடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.
இவர்கள் இருவரும் பணியாற்றும் சூழல் அடிக்கடி இருந்தும் அது கைநழுவி போய் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் கமலும் ரகுவரனும் இணைந்து நடிக்காததற்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டது. அதாவது கமல் தன்னைவிட திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார் என்றும் அதனால் தான் அவர் ரகுவரன் உடன் சேர்ந்து நடிக்கவே இல்லை என்றும் பேசப்படுகிறது. ஆனால் அதெல்லாம் இல்லை என்பதை தன்னுடைய படங்கள் மூலமாகவே கமல் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் ரகுவரனின் மனைவி ரோகினி சமீபத்தில் அளித்த பேட்டியில், மணிரத்தினம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான நாயகனில் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க மணிரத்தினம் முதலில் ரகுவரனை தான் அணுகினார். அதற்கு அவர் ஓகே சொன்னாலும் பிறகு சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டார். அதாவது ரகுவரன் அந்த கேரக்டருக்காக தலைமுடியை வெட்ட மறுத்ததால் அவர் படத்தில் இருந்து விலகியதாக ரகுவரன் மனைவி ரோகினி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…