ஹிந்தி திரையுலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுடேலா, ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு எதிராக சுமார் 7000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி பிரம்மாண்டமான வழக்கு ஒன்றை தொடர முடிவெடுத்திருப்பது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எந்தவித முன் அனுமதியுமின்றி அந்த AI நிறுவனம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதே இந்த வழக்கிற்கு முக்கியக் காரணமாகும். ஏற்கனவே பல முன்னணி திரைப்பிரபலங்கள் தங்கள் அடையாளங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றங்களை நாடியுள்ளது வழக்கம் என்றாலும், ஊர்வசி ரவுடேலா கோரியுள்ள இந்த இமாலய தொகையானது திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
