மத்திய அரசு நாடு முழுவதும் 6 மாதங்களுக்கு மேலாகப் பயன்பாட்டில் இல்லாத மற்றும் e-KYC சரிபார்ப்பு செய்யப்படாத சுமார் 1.58 கோடி ரேஷன் கார்டுகளை முடக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 2.24 கோடி ரேஷன் கார்டுகளில் சுமார் 3.43% பேர் (7,68,320 குடும்பங்கள்) இதுவரை e-KYC அப்டேட் செய்யாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு e-KYC புதுப்பிக்கப்படாத ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டால், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் உடனடியாகத் தங்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக ரேஷன் கார்டிற்கான e-KYC சரிபார்ப்பை விரைந்து முடித்துத் தங்களது கார்டுகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
