married life

தெலுகு நடிகருடன் 16 வயதில் முதல் திருமணம்.. 21 வயதில் அந்த நடிகருடன் 2வது திருமணம்.. சோகம் நிறைந்த சரிதாவின் வாழ்க்கை..

By admin on மார்கழி 6, 2023

Spread the love

நடிகை சரிதா, தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு நடிகையாக, முன்னணி நாயகியாக வலம் வந்தவர். மிக இளம் வயதில் நடிக்க வந்தவர். தமிழில் ரஜினி, கமல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, முகேஷ், தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கன்னடத்தில் ராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்தவர். சரிதா நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. ஆனால், 15 வயது முடியும் தருணத்தில், வெங்கட சுப்பையா என்ற தெலுங்கு நடிகருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆறேழு மாதங்களிலேயே அவர்களுக்குள் மனமுறிவு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதன் பின் சிறிது இடைவெளிக்கு பிறகு, மீண்டும் படங்களில் பிஸியாக நடித்தார் சரிதா.

 married life

   

அப்போது மலையாளத்தில் பல படங்களில் சரிதா நடித்த காலகட்டத்தில் மலையாள நடிகர் முகேஷூடன் ஏற்பட்ட பழக்கம், புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. 2 ஆண் பிள்ளைகளுக்கு தாயானார் சரிதா. முழுநேர இல்லத்தரசியாக குடும்பத்தை கவனித்துக்கொண்டார். இந்நிலையில் கணவர் முகேஷ்க்கும், சரிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்துக்கு தயாராகினர்.

   

இதுகுறித்து முகேஷிடம் சிலர் கேட்ட போது, என் பர்சனல் விஷயங்களில், சரிதா அதிகமாக தலையிடுகிறார். நான் யார் படத்தில் நடிக்க வேண்டும், எந்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் கண்டிசன் போடுகிறார். என் தொழிலில் அவர் குறுக்கிடுவதை என்னால் ஏற்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அதன்பின் அவர் நாட்டிய கலைஞர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

 

 married life

பிறகு சென்னையில், ஜாபர்கான் பேட்டையில் தன் பிள்ளைகளுடன் வந்து குடியிருந்த சரிதா, 2 மகன்களையும் பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார். பாலுமகேந்திரா கேட்டுக்கொண்டதால் ஜூலி கணபதி என்ற படத்தில் மட்டும் நடித்த சரிதா, பின் படங்களில் நடிக்காமல் பல ஆண்டுகளாக விலகி இருந்தார். ஆனால் சினிமாவில் பிரண்ட்ஸ் போன்ற படல படங்களுக்கு புரடக்சன் டிசைனராக சரிதா பணிபுரிந்தார். பல படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடிக்க சம்மதித்து, அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். குட்டி ரஜினியாக இருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்பதால் இந்த படத்தில் நடித்தார் என, ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு இந்த தகவல்களை கூறியுள்ளார்.