இளம் வயதிலேயே விவாகரத்து.. 18 வயதிலேயே சரண்யா சந்தித்த கசப்பான வாழ்க்கை.. இதுவரை யாரும் அறியாத மறுபக்கம்..!

By Nanthini on கார்த்திகை 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் சரண்யா பொன்வண்ணன். நாயகன் மற்றும் அஞ்சலி என்று பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சரண்யா தற்போது அனைத்து படங்களிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சரண்யா அவர்கள் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் பெரும்பாலும் நாயகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

Veteran director and actress Saranya Ponvannan's father AB Raj passed away  | பிரபல இயக்குநரும் நடிகை சரண்யா பொன்வண்ணனின் அப்பாவுமான ஏபி ராஜ்

   

இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சரண்யா பொன் மன்னனுக்கு தேசிய விருது கிடைத்தது. வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக மற்றும் கொடி என பல திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

2 மகள்களும் டாக்டர்': சரண்யா பொன்வண்ணன் ஃபேமிலி ஸ்டோரி

 

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சரண்யா முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது நடிகை சரண்யா தன்னுடைய 18 வயதில் கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ராஜசேகர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கூட அவர் நடித்துள்ளார்.

சரண்யாவின் முதல் கணவர் இவரா? பொண்வண்ணனை மறுமணம் செய்து வைத்ததே இவர் தான்! -  Update News 360 | Tamil News Online

நடிகர் ராஜசேகரை சரண்யா திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு தான் கருத்தம்மா திரைப்படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்வண்ணனை காதலித்துள்ளார். முதல் திருமணமே விவாகரத்தில் முடிந்த சரண்யாவுக்கு பாரதிராஜாவால் தான் பொன்வண்ணனுடன் மறுமணம் நடந்துள்ளது.