தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் சஞ்சனா நடராஜன். இறுதிச்சுற்று திரைப்படத்தில் ரித்திகா சிங் உடன் பாக்சிங் மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனில் வெளியான இந்த படத்திலும் இவர்தான் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார்.
சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் மலையாளத்தில் டியர் ஃப்ரெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இறுதியாக எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான பாட்டில் ராதா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் சஞ்சனா நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் கிடையாது. என்னுடைய ஃபேமிலில இருக்கவங்களுக்கு சினிமாவை பத்தி ஏதும் தெரியாது.
எனக்கு நோட்டாவில் முதல் வாய்ப்பு கிடைத்ததும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டுதான் இந்த இடத்திற்கு உயர்ந்துள்ளேன். அந்தப் படத்தை முடிச்சதும் சார்பட்டா படத்தை என்ன நம்பி பா ரஞ்சித் சார் கொடுத்தாரு. என்னோட கேரியர் மாற முக்கிய காரணமே அவர்தான். டெலிவிஷனில் இருந்து தற்போது இந்த இடத்திற்கு வந்ததில்லை எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்போ போல்டா பண்ண நோட்டா படத்தை இன்னைக்கு பண்ணி இருந்தா கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். பாட்டில் ராதா படத்தில் நடிக்க தினகரன் சிவலிங்கம் சார் கிட்ட பா ரஞ்சித் சார் தான் என்னை பரிந்துரை செய்தார்.
அவர் என்ன சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள கொண்டு வரலைன்னா நான் இன்னைக்கு இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். இதோட என்னோட சினிமா அப்பா இன்னும் நிக்காம இன்னும் நிறைய நடிகர்கள் கூட சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கு. தனுஷ், விஜய் மற்றும் சூர்யா என அடுத்தடுத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க விருப்பம். குறிப்பாக நான் சூர்யாவோட மிகப் பெரிய பேன். அவர் கூட சேர்ந்து நடிக்க ரொம்ப விருப்பம். ஆரம்பத்தில் நான் நோட்டா படத்தில் பண்ணதை ஒரு பெரிய டாஸ்காக தான் பார்க்கிறேன். அப்போ அந்த மாதிரி ஒரு கேரக்டர் எடுத்து பண்ண அதனால தான் இன்னைக்கு பாட்டில் ராதா படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கு ஒரு கான்ஃபிடன்ஸ் கிடைத்தது. எனக்கு கிடைச்ச ஒவ்வொரு வாய்ப்பையும் நான் சரியா பயன்படுத்திக் கொண்டு நடிச்சிட்டு இருக்க என்று சஞ்சனா நடராஜன் பேசியுள்ளார்.