விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல்களுக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த சீரியலை இளைஞர்களும் அதிகம் விரும்பி பார்க்கத் தொடங்கி விட்டனர். குடும்பத்தில் எந்த ஒரு சண்டை வந்தாலும் தனி ஆளாக நின்று குடும்பத்தை தாங்கி பிடித்து பாக்கியா எல்லாத்தையும் சமாளித்து வருகின்றார். கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது முதல் குடும்பத்தை விட்டுச் சென்ற போதும் அனைவரையும் தாங்கி பிடித்தார் பாக்யா.
தற்போது மனம் மாறி பாக்யாவின் நல்ல குணத்தை புரிந்து கொண்டு தனது குடும்பத்துடன் இருக்க கோபி ஆசைப்படும் நிலையில் ராதிகா அதற்கு இடம் கொடுக்காமல் கோபியை விட்டு விலகிச் செல்ல முடிவு எடுத்து அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இது பாக்யாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது பாக்கியாவும் கோபியும் சேர்வார்களா அல்லது முதல் குடும்பத்தை விட்டுச் சென்ற கோபி ராதிகாவுடன் இணைந்து இருப்பாரா அல்லது ராதிகா அனைத்தையும் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று விடுவாரா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை மேலும் பார்க்கத் தூண்டும் வகையில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
ராதிகா வீட்டை விட்டு சென்ற நிலையில் கோபி அதை நினைத்து வருத்தத்தில் இருப்பது போல காட்சிகள் வந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ராதிகா கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் கோபி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர். நீதிமன்றத்திற்கு கோபியும் ராதிகாவும் செல்ல அங்கு ராதிகா தனக்கு கோபி வேண்டாம் விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறார். இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்க சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.
அதில், ராதிகா வீடும் இல்லை, பாக்கியா வெளியே போக சொல்லி ஆர்டர் போட போறா, எங்கே போறது. நம்ம பெஸ்ட் பிரண்ட் செந்தில் ஓட வீடு இருக்கே, வேண்டாம். இருக்கவே இருக்கே நம்ம Cloud Kitchen என பதிவு போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி கதையில் யாரும் எதிர்பாராத விதமாக பெரிய டுவிஸ்ட் காத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க