FLASH NEWS: பிரபல தமிழ் நடிகையின் வீட்டில் திடீர் மரணம்.. மீள முடியாத துயரத்தில் குடும்பத்தினர்.. இரங்கல்..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

பிரபல நடிகை ஷனம் ஷெட்டியின் இளைய சகோதரர் ராகுல் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் கூட விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஒரு மேனேஜர் ஏமாற்றிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இப்படியான நிலையில் இவருடைய இளைய சகோதரர் ராகுல் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், என் தம்பி ராகுல் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இது என் பெற்றோரும் நானும் ஒருபோதும் மீள முடியாத இழப்பு. நீங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருங்கள். உங்களுக்கு ஒருபோதும் விடை கொடுக்க முடியாது. விரைவில் சந்திப்போம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் சனம் செட்டிக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.