#image_title
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். சம்யுக்தா மேனன் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். முதன்முதலாக மலையாளத்தில் உருவான உயரே படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்தடுத்த படம் வாய்ப்புகள் வந்ததால் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
தனுஷ் நடித்த வாத்தி படத்தில் சம்யுக்தா அவருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சம்யுக்தா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் சம்யுக்தா கூறியதாவது, தெலுங்கு படத்தில் அதிக மேக்கப் செய்து கொண்டு நடிப்பது கடினமாக இருந்தது.
மலையாளத்தில் மிகவும் இயற்கையான மேக்கப் தேவைப்படுவதால் எளிதாக இருக்கும். அங்கு சுதந்திரமாகவும் இருக்கும். தெலுங்கில் நமது அழகு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி இருக்கிறது. அது எனது வசதிக்கு எதிரான மன நிலைமையை கொண்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் போது மேக்கப் செய்பவர்களை மட்டுமே அனுமதிப்பேன்.
நடிக்க தயாராக இருக்கும்போது அழகாக இல்லை என்றால் மேக்கப் ஆர்டிஸ்ட் நடுவே வந்து இடையூறு செய்வார். நான் சொல்வதை கேட்கும் போது சிறு பிள்ளைத்தனமாக இருக்கும். ஆனால் இது எனக்கு எளிதானது இல்லை. எப்போதும் எனது முகத்தில் தோலில் ஏதோ இருப்பது போலவே இருக்கிறது என கூறியுள்ளார். தற்போது மோகன்லாலுடன் ராம் படத்திலும், தெலுங்கில் ஸ்வயம்பு படத்திலும் சம்யுக்தா நடித்து வருகிறார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…