அமெரிக்கா போய்கூட இதை விடலையா?… ஆண் நண்பருடன் நடிகை சமந்தா செய்த செயல்… வைரலாகும் புகைப்படம்..

By Begam on ஆவணி 22, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

   

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றது. தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா.

   

 

குஷி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. வருகிற செப்டம்பர் 1-ந் தேதி குஷி திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன. தற்பொழுது நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

 

அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41-வது இந்திய தின அணிவகுப்பிலும் நடிகை சமந்தா கலந்துகொண்டார். அதேபோல அமெரிக்காவில் ஜாலியாக ஊர் சுற்றி, நண்பர்களோடு அரட்டை அடித்து வருகிறார்.

அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை சமந்தா ஜிம்மில் ஆண் நண்பரோடு ஒர்க் அவுட் செய்யும் போது எடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதை இன்னும் நீங்க விடலையா? உடம்ப பாத்துக்கோங்க என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.