‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் பிரபுதேவா உடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.

இவர் நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் முன்னாள் காதலியாக கலக்கி இருப்பார்.

இத்திரைப்படத்தில் வரும்’ முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது. தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் அதிகமான குணச்சித்திர வேடங்களில் பூமிகா நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘சீதா ராமம்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2018ல் சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை பூமிகா இவர் அவ்வப்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

.தற்பொழுது அவர் தனது 45வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

