நடிப்புல வர காசு பத்தலையாம்.. புது ரூட்டில் கல்லா கட்ட தயாராகிய சமந்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!!

By Nanthini on மார்கழி 11, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தா இறுதியாக விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது படங்களிலிருந்து ஒதுங்கி உடல் நிலையில் கவனம் செலுத்தி வருகின்றார். மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் சமந்தா நடிப்புக்கு மட்டும் இடைவெளி எடுத்து இருந்தார். இருந்தாலும் ஒரு பிராண்ட் அம்பாசிடராகவும், business woman ஆகவும் தன்னை பிசியாகவே வைத்துள்ளார்.

   

தற்போது சமந்தா ஒரு தயாரிப்பாளராகவும் மாற உள்ளார். அதாவது சமந்தா புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் பெயரை அறிவித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். சமந்தா தன்னுடைய புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு ட்ரலாலா மூவிஸ் பிக்சர்ஸ் என்று பெயரிட்டுள்ளார். இந்த பெயர் அவருக்கு பிடித்த பாடலால் ஈர்க்கப்பட்டது.

   

\

 

அதாவது பிரபல ஆங்கில பாப் பாடலான brown girl in the ring பாடல் வரிகளில் இருந்து tralala என்ற வார்த்தையை தன்னுடைய தயாரிப்பின் பெயராக சமந்தா எடுத்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் முதலில் சமந்தாவை வைத்து படம் தயாரிக்கப் போவதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சமந்தாவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)